கொரோனாவுக்கு எல்லாம் தாத்தா இந்த நோய்..! கோடிக்கணக்கானவர்களை கொலை செய்த ஸ்பானிஸ் புளூ..! எங்கு? எப்போது தெரியுமா?

கொரோனா வைரஸ்க்கு உலக மக்கள் பயந்து வரும் நிலையில், இதைவிட கொடூரமான நோய் ஒன்று ஏற்கனவே மக்களை தாக்கிய விசயம் தற்போது வெளியாகியுள்ளது.


நம் எல்லோருக்கும் பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்டவை தெரியும். ஆனால், கடந்த 1920 காலகட்டத்தில் உலகம் முழுக்க பரவிய இன்ஃப்ளூயன்ஸா பற்றி பலருக்கும் தெரியாது. ஸ்பானிஷ் ஃப்ளூ என்றும் அழைக்கப்படக்கூடிய  இந்த நோய், 100 ஆண்டுகளுக்கு முன், உலக மக்களை பெரிதும் தாக்கியுள்ளது. இதனால், பல கோடி பேர் அந்த காலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் தொடங்கிய இந்த நோய் படிப்படியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவியுள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பின் தாத்தா கூட இந்த நோய்க்கு பலியாகியுள்ளார்.  

இந்த நோய் பரவிய காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. இந்தியாவில் மட்டும் இன்ஃப்ளூயன்ஸா பாதித்து 1.40 கோடி பேர் பரிதாபமாக உயிரை பறிகொடுத்துள்ளனர். ஒப்பீட்டளவில், கொரோனாவை விட மிகக் கொடூரமானதாக இன்ஃப்ளூயன்ஸா இருந்திருக்கிறது. அதையே மனிதர்கள் சமாளித்துவிட்டனர். எனவே, கொரோனாவையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்று பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.  

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில், பலர் இந்த தகவலை சமூக ஊடகங்களில் நம்பிக்கையுடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.