உருவத்தில் அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்த 2 பெண்கள்! டிஎன்ஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி உண்மை!

தென் கொரியா பகுதியைச் சேர்ந்த ஆஷ்லே என்ரைட் என்ற பெண் அவரது சிறு வயதிலேயே அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் பவுல்டி தம்பதியர்களால் 1988ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கூட்டி செல்லப்பட்டார்.


அதேபோல் திரிஷா தாம்சன் என்ற மற்றொரு பெண்ணும் 1989 ஆம் ஆண்டு ராண்டி பவுலா என்ற அமெரிக்க தம்பதிகளால் அதே தென்கொரியா பகுதியிலிருந்து தத்தெடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கூட்டி செல்லப்பட்டார். 

இதையடுத்து இருவரும் அமெரிக்காவின் வெவ்வேறு வீட்டில் வளர்ந்து  வந்த நிலையில், பல வருடங்களாக ஒரே ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்து வந்துள்ளனர். ஆனாலும் ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்துக் கொண்டதில்லை. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தின விழாவை ஒட்டி ஆஷ்லேக்கும், திரிஷாவுக்கும் டிஎன்ஏ பரிசோதனை பெட்டகம் பரிசாக வந்துள்ளது.

அதன்பின் டிஎன்ஏ பரிசோதனை செய்து மெயில் பாக்ஸில் சோதனையின் முடிவை இருவரும் பதிவு செய்து பரிசோதனை மையத்திற்கு அனுப்பி உள்ளனர். அதில் இருவரும் சகோதரிகளாக இருக்க வாய்ப்புள்ளதாக பரிசோதனை செய்த நிறுவனம் அவர்களிடம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து முகநூல் மூலம் அவர்கள் இருவரும் நண்பர்களாகி பேசிக் கொண்ட பின் ஒரே இடத்தில் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

சந்திப்பில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது உறுதியானது. மேலும்  தத்துக் கொடுக்கப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த பொழுது இருவருக்கும் ஒரே தாய் தான் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சகோதரிகள் நாங்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்வோம் என்று துளியளவு கூட நினைத்துப் பார்க்க வில்லை என்றும், இந்தத் தருணம் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.