பிரபல நடிகரின் மகள் ஜிம்மில் ஏடாகூட பயிற்சி! வைரல் வீடியோ!

பொதுவாக நடிகர் நடிகைகள் அனைவருமே தங்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர். அந்த வரிசையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் அடங்குவார்.


நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டில் மிகவும் முக்கியமான நடிகை ஆவார். பல முன்னனி நடிகர்களுடன் நடித்த இவர், அரசியல்வாதி சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவருக்கு தற்போது 32 வயதாகிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் . சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லவில்லை. மேலும் இவர் எப்போதும் தன் உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார். ஆகவே ஜிம்மில் கடுமையாக பயிற்சி மேற்க்கொள்வார். 

சமீபத்தில் இதேபோல் அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியீட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் "தனது ரசிகர்களும் இந்த மாதிரியான பயிற்சிகளை செய்து உடலில் கட்டு கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து இருக்க விரும்புகிறேன்" என்று கேப்சனும் போட்டிருந்தார். 

இந்த விடியோவை பார்த்தாலே நமக்கும் அவரை போல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்றே கூறலாம். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட்  உள்ளனர். நடிகை சோனாக்ஷி, கடைசியாக இயக்குனர் கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த "காலங்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  https://www.instagram.com/p/BxzQT6QATmF/?utm_source=ig_web_copy_link