தூத்துக்குடியில் பெற்ற மகனால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்ட மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய வருவாய்த்துறை ஆய்வாளர். இந்த நெகிழ்ச்சி சம்பத்தை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
`பெற்ற தாயை சாலையில் வீசிய கொடூர மகன்! நெஞ்சை கணக்க வைக்கும் நிகழ்வின் புகைப்படம்!
தூத்துக்குடி அருகே பெற்ற மகன் தனது தாயை புறக்கணித்து தெருவில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த சண்முகத்தாய் அந்த தாய். 75 வயதான இவர் தனது மகன் சீனி என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சண்முகத்தாய் நோய் வாய்ப்பட்டதால் அவரை வீட்டில் சேர்க்காமல் வெளியே கொண்டுபோய் விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 7 நாட்களாக இரவு, பகலாக வெயில் மழையில் காய்ந்தும் நனைந்தும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார் சண்முகத்தாய். இவர் படும் கஷ்டத்தை அறிந்த பொதுமக்கள் வருவாய்த்துறை ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் மோகன் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த் விசாரணையில் அந்த மூதாட்டி 2 நாட்கள் பட்டினியாலும், கொட்டும் மழை - வெயிலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, , மூதாட்டியை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். பின்னர் சண்முகத்தாயை சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், மூதாட்டிக்கு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில், வருவாய்த்துறை ஆய்வாளர்கள் பெற்ற தாய்க்கு உணவளிக்காமல் தவிக்கவிட்டதாக மகன் சீனி மீது காவல் துறையில் புகார் அளித்தனர். மேலும் இந்த புகாரில் கடும் நடவடிக்கை எடுக்ககோரி கோரிக்கையும் ஏழுந்துள்ளது.
இதற்கிடையே, சிகிச்சைக்குப்பின் அந்த மூதாட்டியை தூத்துகுடி அருகே உள்ள பாண்டவர் மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சி சம்பத்தை பார்த்த பொதுமக்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு பாராட்டி உள்ளனர்.