நள்ளிரவு..! அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தாய்..! அருகே வந்த பெற்ற மகன் செய்த பதற வைக்கும் சம்பவம்!

கிருஷ்ணகிரி: நள்ளிரவில் வீடு திரும்பிய மகன் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி. இவருடைய மகன் சதிஷ்குமார் (24 வயது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பாக்யலட்சுமியின் கணவர் இறந்துவிட்டார். இதனால், கடன் சுமையை சமாளிப்பதற்காக, பாக்யலட்சுமி தன் பேரில் இருந்த வீட்டு மனை ஒன்றை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டாராம்.  இதன்பேரில், பாக்யலட்சுமி மீது மகன் சதிஷ் அதிருப்தி அடைந்துள்ளார். அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டு வந்துள்ளது.  

இந்நிலையில், சம்பவத்தன்று சதிஷ்குமாருக்கும், தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற  சதிஷ்குமார், சில மணி நேரம் கழித்து, நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது உறக்கத்தில் இருந்த பாக்யலட்சுமி தலையில் கட்டையால்  அடித்துக் கொன்றுவிட்டார். பிறகு, கிருஷ்ணகிரி டவுன் போலீசாரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு சதிஷ்குமார் சரணடைந்தார்.

அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.  பெற்ற தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.