எடப்பாடியிடம் சரண்டரான மருமகன்! அதிர்ச்சியில் வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் என்று அவர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்து முடிந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒருவர் அதிமுகவில் இணைந்தார். அவர் வேறு யாரும் அல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி மகனான கார்த்திகேயன் என்பவர் தான். இவர் சென்னையில் அண்ணா நகரில் அதாவது வைகோ வசிக்கும் பகுதியிலேயே உணவகம் நடத்தி வருகிறார். இதுநாள்வரை வைகோவுடன் இருந்து வந்த அவர் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து கேட்டபோது கடந்த தேர்தல் வரை திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று கூறி வந்த வைகோ தற்போது அதிமுக வெற்றிக்காக வேலை பார்த்து வருவது தனக்கு பிடிக்கவில்லை என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுகவில் இணைந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

தனது சகோதரியின் மகனான மருமகன் அதிமுகவில் இணைந்து வைகோ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் கார்த்திகேயன் ஏன் இப்படி செய்தார் என்று வைகோ மிகுந்த மனவேதனையில் இருப்பதாக சொல்கிறார்கள்.