பிரிந்து சென்ற மனைவி! மாமியாரிடம் சென்று கேட்க கூடாததை கேட்ட மருமகன்! திசையன்விளை சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் ஆதார் கார்டு கொடுக்க மறுத்த மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் தேடிவருகின்றனர்.


சென்னையில் இரும்புக் கடை நடத்திவரும் பொன்வேந்தன் என்பவருக்கும் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ரம்மதபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்சிக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவர் பொன்வேந்தனை பிரிந்த பிளஸ்சி தனது தாய் மிக்கல்கனி வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் பொன்வேந்தன் மனைவியின் ஆதார் அட்டையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முறையான காரணம் தெரிவிக்காமல் ஆதார் கார்டு கொடுக்க முடியாது என மாமியார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்வேந்தன் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மிக்கேல்கனி காவல்துறையிடம் புகார் அளிக்க வழக்குப்பதிவு செய்து பொன்வேந்தனை தேடி போலீசார் தேடி வருகின்றனர். ஆதார் அட்டையை வைத்து அவரது மனைவி பெயரில் கடன் ஏதாவது வாங்கி மோசடி செய்ய திட்டமிட்டாரா, அல்லது வேறு ஏதேனும் சிக்கலில் மாட்டிவிட பொன்வேந்தன் திட்டமிட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.