கொல்கத்தா: கோமியம் குடித்ததால் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா குணமாக மாட்டு மூத்திரத்தை குடித்த நபர்..! அடுத்த நிமிடம் அவருக்கு நேர்ந்த பரிதாபம்! என்னாச்சு தெரியுமா?
நாடு முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க, கோமியம் அருந்துவது, மாட்டுச்சாணம் பூசிக் கொள்வது போன்ற வேலைகளை பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர். இதற்காக, இவர்கள் மிகப்பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். அதில் பங்கேற்கும் மக்களுக்கு கோமியம் குடிக்க தருவதும் வழக்கமாக உள்ளது.
இதன்படி, கொல்கத்தாவில் பாஜகவை சேர்ந்த நாராயண் சாட்டர்ஜி என்ற நபர், பொதுமக்களுக்கு கோமியம் விநியோகித்துள்ளார். கோமியம் குடித்ததால் தனக்கு பலவித நன்மைகள் ஏற்பட்டதாகவும், உடல்நலம் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனை நம்பி பலரும் கோமியம் குடிக்க, அதில் ஒரு நபருக்கு ஒவ்வாமை காரணமாக, குமட்டல் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில்
அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மூர்ச்சையானார். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் கோமியம் விநியோகித்த சாட்டர்ஜியை கைது செய்தனர். இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே, கோமியம் அருந்துவதால் எந்த கெடுதலும் இல்லை என்று, பாஜகவின் மேற்கு வங்க தலைவர் திலிப் கோஷ் விளக்கம் அளித்துள்ளார். இவர்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டார்கள் என்று, சமூக ஊடகங்களில் பலர் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.