வன்னிய இனத்தின் துரோகி ராமதாஸா? வேல்முருகனா? திகில் கிளப்பும் விமர்சனம்!

வன்னியர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் எந்த நன்மையும் செய்யவில்லை என்று, அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் வேல்முருகன்.


சமீபத்தில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை மிரட்டி கட்சியில் சேர்த்துக்கொண்டதாக ராமதாஸ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.. வன்னியர்களின் துரோகி யார் என்று உலாவரும் செய்தி இதுதான்.

வன்னியர் சங்கம் வளர்த்த காலத்தில் உழைத்த தீரன், பு.தா.இளங்கோவன், ச. சுப்பிரமணியன், ஏ.கே நடராசன், போரூர் சண்முகம், சி.என். ராமமூர்த்தி , நவமணி சீனிவாசன், கோபால் கவுண்டர், சைதை சிவா, தனுசு அன்பழகன், வேலூர் மோகன், திருவண்ணாமலை பாபுக்கவுண்டர், விழுப்புரம் பாலசண்முகம், பரணீதரன், ஏழுமலை, மேல்மலையனூர் செந்தமிழ்ச்செல்வன், சேலம் சதாசிவம், சின்னப்பன் ,

பாலகிருஷ்ணன் ராமசுப்பன், தாரமங்கலம் அம்மாசி,  தருமபுரி பெரியண்ணன், கடலூர் மாரிமுத்து, விருத்தாசலம் சந்தானமூர்த்தி, சிதம்பரம் மணிவண்ணன், சேத்தியாதோப்பு இமையவரம்பன், நெய்வேலி ராசவேல், பண்ருட்டி ராமர், ஈரோடு வெங்கடாச்சலம், சம்பேரி தனவேல், செந்துறை ஞானமூர்த்தி, அரியலூர் அறிவழகன்,  காட்டு மன்னார்கோயில் 

கண்ணன், ராமானுஜம் , திருச்சி பாக்கியம் ராஜமாணிக்கம், மாயவரம் ஜெயராமன், மூர்த்தி, குபேந்திர குணபாலன்,  செந்தி தரணிவேந்தன், அணுக்கூர் ராசேந்திரன், பாதிரி கோவிந்தசாமி, இறையூர் ராசவேல், இப்படி பலர் களம் கண்டு போராடி பல வழக்கினை சுமந்தவர்கள் ஏராளம். இவர்களுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் துரோகம் செய்தது வேல்முருகனா? ராமதாசா?

வட இந்தியத் தலைவர்கள் முதல் ரிலைன்ஸ் அம்பானி வரை அறிமுகப்படுத்தி அரசியல் வானில் உயர காரணமாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியை, சேலத்தில் தேர்தலில், கூட்டணி தர்மத்தையும் மீறி தோற்க்கடித்தது வேல்முருகனா? ராமாதாசா?

காடுமேடெல்லாம் சுற்றி இன எழுச்சி பிரச்சாரத்தை செய்து ராமதாஸ் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர், என பில்டப் கொடுத்து 5 சத்தியத்தை நம்பும்படி பேசி, உயர்த்திய பேராசிரியர் செஞ்சி நாடான் என்ற தீரனை ஓரம்கட்டி உருதெரியாமல் ஆக்கியவர் வேல்முருகனா? ராமதாசா?

இளம் பிராயத்தில் இளமையை பலியிட்டு இனத்தின் எழுச்சிக்குப் பாடுபட்ட பு.தா.இளங்கோவன், பு. தா.அருள்மொழி வாழ்க்கையை சீரழித்தது வேல்முருகனா? ராமதாசா? உடையார்பாளையம் வன்னிய அடிகளாரையும், ஏ.கே.நடராஜனையும், ச.சுப்பிரமணியத்தையும்,  பண்ருட்டியாரையும், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தியையும், அடியாட்கள் கொண்டு அச்சுறுத்தி, மிரட்டியது வேல்முருகனா? ராமதாசா?

பெண்ணாடத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க கூட்டத்தில், துளார் கலவரத்தை சொல்லி வன்னியர் சார்பில் மன்னிப்பு கேட்டது வேல்முருகனா? ராமதாசா? வேப்பூர் ஒன்றியம் ஒகளூரில் நடைபெற்ற கலவரத்தை பார்வையிட வந்து, வன்னியர்களை திட்டி தீர்த்தது வேல்முருகனா? ராமதாசா?

செந்துறை ஒன்றியம் மருவத்தூரில் வன்னிய பெண்ணும்,   ஆ.தி.இளைஞனும் காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என திண்டிவனம் சென்றபோது, அந்த திருமணத்தை நடத்தி வைத்தது வேல்முருகனா? ராமதாசா? பதவிசுகத்தை அனுபவித்து விட்டு அதிமுகவுக்கு சென்ற ஆ. தி. முன்னாள் மந்திரிகள் எழில்மலை, பொன்னுசாமிக்கு மந்திரி பதவி வழங்கியது வேல்முருகனா? ராமதாசா?

வன்னியர் சங்க மாநாடுகளில் திருமாவளவனை அழைத்து பேசவைத்து, நீ தான் தம்பி இந்த நாட்டின் முதல்வர் என்று அவர் கையை உயர்த்தி பிடித்தது வேல்முருகனா? ராமதாசா? தைலாபுரம் தோட்டத்தில் திருமாவளவனுக்கு விருந்து வைத்து பாமகவும், வி.சி.க வும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடுவோம் என பேசியது வேல்முருகனா? ராமதாசா?

சாதிய அடையாளத்தை நீக்குவதற்க்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை, மீண்டும் அடையாளப்படுத்தி  தம்மகனை முதல்வர் ஆக்க துடிக்கிறார் இராமதஸ் என்று அவரின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் வெளி வந்த திருமாவளவனை தற்போது அவதூறாக பேசுவது வேல்முருகனா? ராமதாசா? காடுவெட்டி குருவின் உழைப்பை உறிஞ்சி கொண்டு, உடல் நலன் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு கோடி செலவாகும், பணம் எடுத்துவா, வைத்தியம் பார்ப்போம் என்று குருவிடமே கூறி மரணத்தை தழுவ காரணமாக இருந்தது வேல்முருகனா? ராமதாசா?

உணருங்கள் இன துரோகத்துக்கு ராமதாசை விஞ்சியவர்கள் இந்த நாட்டில் யாரும் இல்லை. தன் மகனுக்காக, யாரையும் பலியிடுவார் ராம்தாஸ்.  உதாரணம் குரு. என்று முடிகிறது அறிக்கை. 

இனி முடிவு நீங்கள்தான் சொல்லவேண்டும்.