தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவியைத் தடுக்கும் சோப்பு அமைச்சர்! யாருன்னு தெரியுதா?

தமிழ்நாடு ஐ.டி துறை அமைச்சர் மணிகண்டனைத் தூக்கினால் இத்தனை தொல்லை வரும் என்று எடப்பாடியே அஞ்சும் அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது அந்தப் பதவிக்கு.


அந்த போட்டியில் இப்போது தோப்பு வெங்கடாசலமும் குதித்து விட்டார்.ஈரோடு நகர்புற மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடமில்லை என்பது அவரது வாதம்.இதற்கு ஈரோட்டைச் சேர்ந்த , தோப்பு வெங்கடாசலத்தின் குணநலன்கள் தெரிந்த மாஜிகள் இருவர் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால் எதிலும் மாறுபட்டு சிந்திக்கும் தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் பதவியை பிடிக்க வழக்கமாக எல்லோரும் போகும் வழியில் எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய 'மணிகளை' நாடாமல் உள்ளூரில் இருக்கும் உறவுகளை பிடித்திருக்கிறாராம்.கட்சிக்காரர்களின் வார்த்தையை விட உறவுகளின் பேச்சுக்கு எடப்பாடியார் கட்டுப்படுவார் என்பதை கண்டுபிடித்த தோப்பு அந்தவழியை தேர்ந்தெடுத்தாராம்.

அவர்களும் , முதல்வர் அமெரிக்கா போய் வரட்டும் உங்களை அமைச்சராக்குகிறோம் என்று உறுதியே கொடுத்து விட்டதாக உற்சாகமாகச் சொல்கிறாராம் தோப்பு வெங்கடாசலம்.இந்த விபரம் அறிந்து தோப்புக்கு எதிராக சோப்பு நுரை அமைச்சர் களமிறங்கி இருக்கிறாராம்.மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பதால்தான் நொய்யலாற்றில் நுரை நுரையாக வருகிறது என்று சொல்லி ஒரே நாளில் மக்கள் மனதில் இடம்பிடித்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் கருப்பண்ணன்,

தோப்பு வெங்கடாசலம் எப்படி அமைச்சர் ஆகிறார் பார்க்கிறேன் என்கிறாராம் கருப்பண்ணன்.கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது கருப்பண்ணன் திமுகவுடன் கை கோர்த்து வேலை பார்ப்பதாக தோப்பும்,அவர் தினகரனின் ஆள் என்று சோப்பும் மாறி குற்றம் சாட்டியபோது துவங்கிய பகை இப்போது உச்சத்துக்கு வந்திருக்கிறது.