வீட்டின் கதவை திறந்த நபர்! காத்திருந்து போட்டுத் தள்ளிய பாம்பு!

அமெரிக்காவில் வீட்டின் கதவை திறக்கும் நபர் ஒருவரின் தலையை பாம்புக்கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ளது லாட்டன் என்ற நகரம். இந்த ஊரைச் சேர்ந்த ஹேவுட் என்ற இளைஞன் தனது நண்பன் கோப்லேண்ட்-ஐ பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். நண்பரின் வீட்டுக் கதவைத் திறந்த அவர் திடீரென ஒரு துரதிஷ்ட சம்பவத்தை எதிர்கொண்டார்.

அது என்னவென்றால் தனது நண்பனின் வீட்டில் கதவுக்கு மேல் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது. இதனால் அலறிய  ஹேவுட் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அலறினார். பாம்பு தன்னை கடித்து விட்டதாக அவர்கள் அலறவே அண்டை வீட்டார் பலரும் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திறண்டு விட்டனர்.

இதையடுத்து அவரது நண்பர் மற்றும் அந்த வீட்டிலிருந்தவர்கள் ஹேவுட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதற்கு காரணம் அந்தப் பாம்பு விஷமற்றது என்பதேயாகும். ஆனால் ஹேவுட்டை கடித்த பாம்பை அண்டை வீட்டார் ஒருவர் கோடாரியால் வெட்டி கொண்டுள்ளார். ஹேவுட்டைஅந்த பாம்பானது கடிக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.