மோடிக்குப் போட்டியாக குப்பை பொறுக்கும் குட்டி நாட்டின் தலைவர் இவர்! அட, நிஜமாவே பொறுக்குகிறாராம்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக அழகிய ஒரு சிறு நாடே ருவாண்டா. தலைநகர் கிகாலி. 1000 குன்றுகள் கொண்ட நாடு என்ற செல்லப் பெயர் உடைய நாடு.


மலையும் , ஆறுகளும், பச்சை பசேலென்ற நிலப்பரப்பும் இந்த நாடு முழுவதும் கண் கொள்ளாக் காட்சி. 1994- இல் இங்கு ஒரு கொடூர வன்முறை வெடித்து லட்சக் கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் அந்த வன்முறை நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நாடு இனி எழுதிருக்கவே எழுந்திருக்காது என்று அனைத்து மேற்கத்திய நாடுகளும் கனவு கண்டு கொண்டிருக்கையில்,

“ சாரி...யூ ஆர் ராங்” என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அந்த நாட்டின் அதிபர் பால் ககாமே. இவர்தான் அந்தக் கலவரத்துக்கே காரணம் என்று ஒரு தரப்பு சொன்னாலும், இவர்தான் அந்த நாட்டின் மறுமலர்ச்சிகும் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

சுத்தத்திற்குப் பேர் போன சிங்கப்பூரிலும், அதற்கு இணையான பேர் வாங்கிய கனடாவிலும், நான் ஏகப்பட்ட குப்பை கூளங்களைப் பார்த்து, படம் எடுத்து வைத்திருக்கிறேன்.

ஆனால், ருவாண்டாவில் அதைப் பார்ப்பது மிகவும் கடினம். காரணம் அந்த நாட்டின் அதிபர் பால் ககாமே. ஒரு முறை கிகாலியில் , ஒரு பொது இடத்தில் பிளாஸ்டிக் கலந்த ஒரு குப்பை அதிபர் கண்களில் தென்பட, கிகாலி நகரின் மேயர் அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

எல்லா இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்போல் பளீரென்று சுத்தமாக இருக்கும். இது எப்படி சாத்தியமாகியது. ஒரு 10 வருடங்களுக்கு முன்னர் அதிபர் ஒரு சட்டம் கொண்டு வந்தார். மாதத்தின் கடைசி சனிக் கிழமை, நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் ஏரியாக்களை சுத்தம் செய்ய வேண்டும் .

இந்தச் சட்டம் அதிபருக்கும் பொருந்தும். அன்றே பிளாஸ்டிக் தடை பைகளும் தடை செய்யப்பட்டன. அது மட்டுமல்லாது, தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டனர். சரியாக தங்கள் பணிகளைச் செய்யாத துப்புரவுப் பணியாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்படுகிறார்கள்.

அதிபர் கிகாலியில் இருந்தால் அவரும் வெளியில் வந்து துப்புரவு செய்வதைக் காணலாம். அவர் இதை உண்மையான நோக்கத்துடன் செய்வதால் , அதைப் படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ அனுமதிக்கப்படுவதில்லை . ஃபோட்டோகிராஃபர்களும் அன்று தெருவில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதால், அனைவரும் அந்த வேலையில் பிஸி. அன்று எங்கேனும் பயணம் செல்பவர்களும், வெளிநாட்டினரும் மட்டுமே இதற்கு விதி விலக்கு.

நாம் மோடியைப் பார்த்து ஆச்சர்யப்படுவதைப் போன்று, இந்த உலகமே இப்படியும் ஓர் அதிபரா என்று பால் ககாமேவைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள்.