திருமணமான 3 மகள்கள்! 48 வயதில் உடல் சார்ந்த தவறான தேடல்! பஞ்சவர்ணத்திற்கு ஏற்பட்ட பயங்கரம்! புதுக்கோட்டை திகுதிகு!

முறையற்ற வாழ்வு வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் படுகையில் சடலமாக மீட்கப்பட்டார்.


புதுக்கோட்டை மாவட்டம் விளானூரை சேர்ந்த கணவரை இழந்த பஞ்சவர்ணம் (வயது 48) என்பவர் தன்னுடைய 3 மகள்களுக்கு திருமணம் செய்துவிட்டு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கிக்கு சென்ற தாய் காணவில்லை என அவர் மகன் பால்வண்ணச்சாமி போலீசில் புகார் அளித்திருந்தார்.

பஞ்சவர்ணத்தின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் அவருடன் அதிகம் பேசிய காளிமுத்து என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் பஞ்சவர்ணத்தை நண்பர்கள் குமார் மற்றும் லனின்பாய் ஆகியோருடன் சேர்ந்து கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் உடலை சிவகங்கை மாவட்டம் வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார் காளிமுத்து. பின்னர் காளிமுத்து அடையாளம் காட்ட சிதிலமடைந்த நிலையில் பஞ்ச வர்ணத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 

பஞ்சவர்ணத்திற்கும், காளிமுத்துவிற்கும் முறையற்ற உறவு இருந்துள்ள நிலையில் கடன் தொல்லை காரணமாக நகைகள் கேட்டுள்ளார் காளிமுத்து. ஆனால் பஞ்சவர்ணம் நகை தர மறுக்கவே வேறு விதமாக கூறியுள்ளார் காளிமுத்து.

தன்னுடைய 25 சவரன் நகை காரைக்குடியில் அடகு கடையில் ஏலத்திற்கு செல்லும் நிலையில் இருப்பதாகவும், அந்த நகைகளை மீட்க உதவி செய்தால், 25 சவரன் செயினை பஞ்சவர்ணத்துக்கே கொடுப்பதாக ஆசை வார்தை கூறியுள்ளார் காளிமுத்து.

பின்னர் காளிமுத்துவை நம்பி இருசக்கர வாகனத்தில் சென்ற பஞ்சவர்ணத்தை வடகீழ்குடி ஆற்றுப்படுகை அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார் காளிமுத்து.