சிக்காக்கோ விமான நிலையத்தில் ரஜினியின் மகள் உறவுப் பெண்ணுக்கு தடுப்புக்காவல்! உண்மையில் நடந்தது என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியின் அக்காள் மகளை விமான நிலையத்தில் கைது செய்து விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் அது வெறும் வதந்தி என ஆடியோ மூலம் மதுவந்தி வெளியிட்டுள்ளார்.


சென்னையிலிருந்து சிகாகோவில் தனது நாடக கலைஞர்களுடன் நாடகத்திற்காக சூப்பர் ஸ்டாரின் மனைவியின் அக்காள் மகளான மதுவந்தி சென்றுள்ளார். அப்போது சிகாகோ செல்வதற்கு விசா பி3 தேவைப்படும் எனவும் அவர்களிடம் விசா பி1 இருந்ததாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றவர். இவர் மனைவியின் அக்காள் மகளும் பிரபல தமிழ் நடிகரான ஒ.ஜி. மகேந்திராவின் மகளாக மதுவந்தி கடந்த 4 ஆம் தேதி சென்னையில் இருந்து சிகாகோ புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர்களுடன் நாடகக் கலைஞர்களும் விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது அவரது விசாவை பார்த்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மற்றும் அவர்களின் விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் செய்தியானது சமூக ஊடகங்களில் பலராலும் பரப்பப்பட்டு மதுவந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த மதுவந்தி இதுகுறித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தங்களுக்கு விசா பி3 தேவைப்படும் எனவும் ஆனால் தங்களிடம் விசா பி1 தான் இருந்ததாகவும் இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாங்கள் விசா அப்ளை செய்ய அலுவலகம் சென்றதாகவும் அவர் அந்த ஆடியோ பதிவு கூறியிருந்தார்.

தற்போது பிரபலமானவர்கள் பற்றிய ஏதாவது ஒரு தகவல்கள் கிடைத்தாலும் சமூக வலைதளங்களில் உள்ள நபர்கள் அவற்றை தவறாக பதிவிட்டு விடுவதாக அவர்கள் மீது வெறுப்பு தெரிவித்துள்ளார்.