மகள் மானபங்கத்திற்கு காரணம் அவர் தாய் தான்! பிரபல நடிகை மீது முதல் கணவன் பரபர புகார்!

மும்பை: நடிகை ஸ்வேதா திவாரியின் அஜாக்கிரதையால்தான் மகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக, அவரது முன்னாள் கணவர் கூறியுள்ளார்.


சமீபத்தில் நடிகை ஸ்வேதா திவாரி தனது முன்னாள் கணவர் ராஜா சவுத்ரி மீது போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகள் பாலக்கை, ராஜா சவுத்ரி பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இதற்குப் பதில் அளித்துள்ள ராஜா சவுத்ரி, இந்த பிரச்னைக்கு ஸ்வேதாதான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், ''இது எதிர்பார்த்த ஒன்றுதான். என் முன்னாள் மனைவியின் வீட்டிற்கு, யதேச்சையாக செல்ல நேரிட்டது. இதன்படி, மும்பை மலாட் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, அங்கே எங்களது மகளுடன் ஸ்வேதாவின் மற்றொரு கணவர் அபினவ் இருந்தார்.

ஸ்வேதா ரியாலிட்டி ஷோவிற்குச் சென்றுவிட்டார். எனவே, எனது மகளிடம் அந்த நபர் தவறான வகையில் நடந்துகொண்டார். இதை நான் கண்டித்தேன். எங்களுக்குள் உடனே சண்டை ஏற்பட்டுவிட்டது.

அந்த நபரை நான் தாக்க நேரிட்டது. ஆனால், நான்தான் என் மகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்தேன் என போலீஸ் புகார் கூறியுள்ளனர். ஒரு தந்தை என்றும் பாராமல் என் மீதே இப்படி புகார் கூறியது மிகவும் வேதனையாக உள்ளது,'' என்றார். 

அதேசமயம், இவரது புகாரை அபினவ் தாயார் மறுத்துள்ளார். எந்த தவறும் நிகழாதபோது, ராஜா சவுத்ரி அதனை பெரிய பிரச்னையாக மாற்றி, தன் மகனை சிறைக்கு அனுப்பிவிட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.