ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் விபரீதம்! தலைகீழாக கீழே விழுந்த நடிகை! கழுத்து முறிந்த பரிதாபம்!

ஆலம் மக்காருடன் நடனமாடும்போது நடிகை ஷ்ரத்தா ஆர்யா காயமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.


நாச் பலியே 9 சீசன் படப்பிடிப்புத் தளத்தில் ஆலம் மக்காருடன், நடனப் பயிற்சியில் ஷ்ரத்தா ஆர்யா  ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆலம் சுமந்தபடி நிற்க, அவரது மேலே ஷ்ரத்தா ஆர்யா,  தொங்கியபடி நடனமாட முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராவிதமாக, ஆலம் மக்கார் தனது பிடியை நழுவவிட, அவர் உடனே கீழே விழுந்துவிட்டார். எனினும் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  தொடர்ந்து இருவரும் நடனமாடி முடித்துவிட்டனர்.

பிறகு, ரிகர்சல் முடிந்ததும், இடுப்புப் பகுதி மற்றும் கழுத்தில் காயமடைந்த ஷ்ரத்தா ஆர்யா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கழுத்தில் சிறிய அளவில் முறிவு ஏற்பட்டிருந்ததும் தற்போது சற்று உடல்நலம் தேறிவந்த நிலையில் இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''ரிகர்சல் பார்க்கும்போது எதிர்பாராவிதமாக ஆலம் மக்கார் கைப்பிடியை தவறவிட்டதால், நான் விழுந்து காயமடைந்தேன். இருந்தாலும், பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இதைக் காட்டிக் கொள்ளாமல் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து நடனமாடி முடித்தேன்,'' என்று கூறியுள்ளார்.