சாப்பிடும் போது பேசக்கூடாதுனு சொன்னாங்க ! ஏன்னு சொல்லலையே?

சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா?


சாப்பாடு சாப்பிடுகின்ற பொழுது, நாம் சாப்பிடும் உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சாப்பாட்டின் ருசி நமக்குள் சென்று சேருகின்றது என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்குப் பின்னால் சில விஞ்ஞான அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. வாய்ப்பகுதியில் இருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டதட்ட நாம் ரயிலில் போகும்போது போடப்படுகிற லெவல் கிராஸிங்கைப் போன்றது.

அதென்ன ரயில்வே கிராஸிங் மாதிரி என்று கேட்கிறீர்களா? சுவாசப் பாதையை ரோடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உணவுப் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல. நம்முடைய சாதாரண ரோடைப் போலத்தான் நம்முடைய சுவாசக்குழாய்ப் பகுதியும் எப்போதும் திறந்தே இருக்கும். காற்றும் வந்து போய்க் கொண்டே இருக்கும். ஆனால் உணவுப் பாதை ரெயில்வே பாதையைப் போன்று எப்போதாவது தான் திறக்கும். பின்பு மூடப்படும். அதாவது நாம் உணவு உள்ளே செலுத்தும் போது சுவாசப் பாதை உணவுப் பாதையைத் திஜறந்து வழிவிடும். உணவு உள்ளே சென்ற பின்பு மீண்டும் அது திறக்கும். மூடும். இதுதான் நாம் சாப்பிடும் போது உடலில் நடக்கும்.

அதேசமயம் உணவு சிறிதேனும் காற்று உள்ளே செல்லும் சுவாசப் பாதைக்குள் சென்று விட்டால் அது பேராபத்து. அதை வெளியேற்றுவதற்கான நம் சுவாசக்குழாய் எடுக்கும் முயற்சி தான் புரையேறுவது என்று சொல்லுவோம். இதை வாட்ச்டர்க் மெக்கானிசம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.