வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் இனி ஷாப்பிங் செய்யலாம்! அதிரடி புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வசதியை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேஸ்புக்கின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப்பில் வர்த்தகம் செய்வதற்கான செயல்முறை குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளித்தார்.

வணிகர்கள் இனி வாட்ஸ்ஆப்பிலேயே பொருட்களுக்கான பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. மேலும் விலை உள்ளிட்டவை குறித்து பேரம் பேசி வாடிக்கையாளர்கள் விரும்பும் நபரிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இதன் மூலம் வாட்ஸ்ஆப் சாட்டிங் மூலமே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய முடியும். அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆப்களுக்கு தனியாக செல்ல வேண்டியதில்லை. இந்த வசதியினால் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பயனடைவர் என்று பேஸ்புக் நம்பக்கை தெரிவித்துள்ளது.

 மேலும் வாட்ஸ்ஆப் மூலம் பணப்பறிமாற்றம் செய்யும் வசதி தற்போது இந்தியாவில் சோதனையில் உள்ளதாகவும் விரைவில் உலகம் முழுவதும் இந்த வசதி தொடங்கப்படும் என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.