தேர்தல் தோல்வி! ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு ஒரு அதிமுக தொண்டனின் பகிரங்க கடிதம்!

தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்திய உண்மைகள்


 1)அம்மா அவர்கள் தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் நமக்கு தேடி தந்த உலகமே வியந்த வெற்றியில் அவரின் மறைவுக்கு பிறகு நாம் இழந்தது நம் வசம் இருந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 12 சட்டமன்ற உறுப்பினர்களையும், அதாவது சுமார் 20% வாக்குகளை குறிப்பாக (1) அஇஅதிமுக வின் எஃகு கோட்டை என கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக கணக்கிட்டால் சராசரியாக ஒவ்வொரு தொகுதிகளிலும் நாம் 6000 முதல் 60000 வாங்குங்கள் திமுக வை விட பின்தங்கி உள்ளோம் (2)ஒரு கோடிக்கு மேலான வாக்குகள்), இதை ஒரு சாதாரண நிகழ்வாக நாம் எடுத்து கொண்டு இன்னமும் எதிரிகளை நாம் கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தால் இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் நாம் படுதோல்வி யை சந்திக்க வேண்டி இருக்கும்,

(3) மக்கள் இதுவரை தாங்கள் வெறுத்து வந்த திமுக விற்கு இவ்வளவு வாக்குகளை அள்ளி கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நம் மீது அதாவது நமது கட்சி, ஆட்சி மீது எவ்வளவு அதிருப்தி அடைந்து இருக்கிறார்களா என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள், (4) இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்து கொண்டு இனி வரும் இரண்டு ஆண்டுகள் முழுக்க முழுக்க மக்கள் விரும்பும் அரசாக, மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்காத அரசாக, எதிர் கட்சியினர் நம்மை கைநீட்டி ஒரு குற்றச்சாட்டுகள் குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு எளிய, மக்களூக்கான ஆட்சியை அதாவது உண்மையான,

எதற்கும், யாருக்கும் அடி பணியாத, அம்மாவின் ஆட்சியை நாம் நடத்தினால், இனி வரும் காலங்களில் நாளை நமதே இந்த நாடும் நமதே என வரும் காலங்களில் நாம் கொண்டாடலாம், இல்லையென்றால் நாமும் நமது இயக்கமும் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது, இது தான் இன்றைய ஏதார்த நிகழ்வு, இதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள்