அந்த 3 நாட்களில் நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு இவ்ளோ ஆபத்துகளா? அதிர்ச்சி உண்மைகள் உள்ளே!

ரசாயனம் கலந்த நாப்கின்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் பிரச்சனை, கருப்பை பிரச்சனைகள் வருவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் துணியை பயன்படுத்தி வந்த காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் ரசாயனம் கலந்த சானிட்டரி நாப்கின்களை பிறப்புறுப்பில் வைப்பதால் அதில் இருக்கும் டையாக்சின் என்ற கொடிய நச்சு கருப்பை வாய் வழியே நுழைந்து கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த டையாக்சின் என்னன்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிந்து கொள்ளுங்கள். சினை முட்டை வளர்ச்சி தடுக்கப்படுகிறது, இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி, சினைப்பையில் நீர்கட்டிகள், கருப்பை கட்டிகள், கருப்பை வாய் புற்றுநோய், தைராய்டு, ஒவ்வாமை, வெள்ளைப்படுதல், நீரிழிவு, மன அழுத்தம், குழந்தையின்மை, மார்பக புற்றுநோய் போன்றவை பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

நம் நாட்டில் பொதுவாக பெண்களுக்கு புகைப்பிடித்தல், மதுப் பழக்கம் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு புற்றுநோய் வருகிறது. ரசாயன சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் பெரும்பாலான பெண்களுக்க கருப்பை பிரச்சனை உள்ளதாக அதிர்ச்சி தகவலும் தெரிவிக்கின்றது.