மகாராஷ்டிராவில் கலவரம் வெடிக்கப்போகிறதா..? என்ன செய்யப் போகிறார் உத்தவ் தாக்கரே! சிவசேனா எச்சரிக்கை

யாருக்குமே தெரியாத அரசியல் நாடகம் போன்று அதிகாலையில் பா.ஜ.க. பதவியேற்பு வைபவம் நடந்தேறியுள்ளது. இது திட்டமிட்டு சிவசேனாவை பழி வாங்கும் செயல் என்று தாக்கரே ஆதரவாளர்கள் எச்சரிக்கிறார்கள்.


பா.ஜ.க.வுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதால் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, கட்சியை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் மகாராஷ்டிரா மக்களால் நிம்மதியாக தூங்கமுடியாமல் போகும் என்று சிவசேனா எச்சரிக்கை செய்துள்ளது. 

பிரதமர் சொல்வதைக் கேட்டு கவர்னர் ஜனநாயக மரபை மீறி செயல்பட்டுள்ளார். நள்ளிரவுக்குப் பிறகு கடிதம் கொடுக்கப்பட்டு அதிகாலையில் பதவி ஏற்கவேண்டிய அளவுக்கு அப்படியென்ன அவசரம், அவசியம் ஏற்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் சதி என்று சிவசேனா கட்சி கொந்தளிக்கிறது.

விரைவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார். அப்போது பா.ஜ.க. மீதும் பட்னாவிஸ் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய உத்தவ் தாக்கரே, ‘‘மகாராஷ்டிராவில் தற்போது நடந்துள்ளது அரசியல் துல்லியத் தாக்குதல். இதற்கு மகாராஷ்டிர மக்கள் பழிக்கு பழி தீர்ப்பார்கள். சிவசேனா எம்எல்ஏக்களை பிளவுபடுத்தினால் மகாராஷ்டிரா தூக்கத்தை இழந்து விடும். சரத் பவாரும், நானும் இணைந்து செயல்படுவோம்’’ என்று கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிராவில்தான் எத்தனை மாற்றங்கள்.