டெல்லி: உங்களுக்குப் பிடிக்காததை எனது மகள் செய்தாள், என ஆர்எஸ்எஸ் விழாவில் ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.
RSSகாரர்களுக்கு பிடிக்காத ஒன்றை என் மகள் தொடர்ந்து செய்வாள்! RSS நிகழ்ச்சிலேயே ஷிவ் நாடார் வெளியிட்ட அதிரடி தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பாக, விஜயதசமி விழா நடைபெற்றது. இதில், ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், ''மத்திய அரசு மட்டுமே தனியாக இந்த நாட்டை முன்னேற்றிவிட முடியாது. இதில், பல்வேறு தொழில்முனைவோரும் சமமான பங்களிப்பு தர வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குழந்தைகளில் 46 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் மூளை வளர்ச்சி, மனநலம் பாதித்து கற்றல் திறன் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை, ஷிக்ஷா என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து, தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வுக்குழுவில் எனது மகளும் பங்கேற்றாள். அந்த குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க, சிக்கன் சாப்பிடும்படி எனது மகள் அறிவுறுத்தியிருக்கிறாள். இது உங்களுக்குப் பிடிக்காத விசயம்தான் (ஆர்எஸ்எஸ், பாஜக.,வினருக்கு அசைவம் புடிக்காது). ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் அரிசி உணவு கிடைப்பதில்லை.
ரொட்டி மட்டுமே கிடைக்கிறது. அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமெனில், சிக்கன் போன்ற புரதச்சத்து உணவுகளை தந்தால் மட்டுமே சாத்தியம். இதுதவிர, விவசாய குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக, ரூ.6,400 ஆக உள்ளது. இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு, 5 பேர், 6 பேர் உள்ள குடும்பத்தை நடத்துவது மிகக் கடினம்.
பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் இத்தகைய விவசாயிகளை கருத்தில்கொண்டு, நலத்திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டும். ராமர், ராவணனை வீழ்த்தியதுபோல, அதர்மத்தை வீழ்த்தி தர்ம வழியில் நாட்டு மக்களுக்கு நல வாழ்வு தரும் பொறுப்பு நமக்குள்ளது. அதனை போராடி பெற்று தர நாம் முயற்சிக்க வேண்டும்,'' என பரபரப்பாக பேசியுள்ளார்.