ஏழு பேர் விடுதலை அம்புட்டுத்தான். நீதிமன்றத்தில் புட்டுவைத்த மத்திய அரசு!

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பிவைத்தது.


அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவே இல்லை. இந்த நிலையில், நளினியின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழக அரசு 2018ம் ஆண்டே என்னுடைய விடுதலைக்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டது. ஆனால், ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், தன்னை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந் நிலையில், மத்திய அரசின் சார்பில் அதன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த முடிவு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அதனால் விடுதலை செய்ய முடியாது’ என்றும் மத்திய அரசு சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு காரணத்தால் விடுதலை சாத்தியப்படலாம் என்று மக்கள் நினைத்துவந்த வேளையில், ஒரேயடியாக திகில் காரணம் சொல்லி சிறைக் கதவை மீண்டும் உறுதியாக அடைத்திருக்கிறது மத்திய அரசு.