பாலியல் உல்லாசம்! ஹவுஸ் ஓனருக்கு வேலைக்காரி சித்திரவள்ளியால் ஏற்பட்ட விபரீதம்!

வீட்டு உரிமையாளருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய வேலைக்காரியை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டு வேலைக்காக சித்திரவள்ளி என்ற பெண்ணை இவர் பணிக்கு அமர்த்தி உள்ளார். அந்தப் பெண் இளம் பெண் என்பதால் மனோஜ் குமாருக்கு சித்திரவள்ளி மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை கொண்டாட தனது குடும்பம் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் ஆசைக்கு இணங்கும்படி சித்திரை வள்ளியை மனோஜ்குமார் அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் இதற்கு ஒத்துழைக்க இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மனோஜ் குமாரின் வீட்டுக்கு வந்த ஒரு நபர் சித்திரை வள்ளியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பதிவு செய்துவிட்டு அந்த பெண்ணை அழைத்துச் சென்று விட்டார்.

வீடியோவை காட்டி மிரட்டி சில ஆயிரம் ரூபாயும் வாங்கிச் சென்ற அந்த நபர் பற்றி ஒன்றும் தெரியாமல் மனோஜ் குமார் புலம்பித் தவித்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அவரது செல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய வேலைக்காரி சித்திரவள்ளி தனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்றும் இல்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் குமார் போலீசில் புகார் அளித்தார் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து சித்திர வள்ளியையும் அவருடன் சென்ற நபரையும் தேடி வருகின்றனர்