கணவன் - மனைவினா இப்படித்தான் இருக்கணும்ங்ற கட்டுப்பாடு எங்களுக்குள் கிடையாது..! குழந்தை பெற்ற பிறகு சீரியல் ஜோடி சொன்ன ரகசியம்!

ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் மனைவி, மகளுடன் சந்தோஷமான வாழ்க்கை என படுபிசியாக இருக்கிறார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலானவர்களிடம் நல்ல பெயர் எடுத்த கணேஷ் வெங்கட்ராம் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்தவர். மற்றும் விளம்பரப் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மனைவியுடன் நல்ல நண்பராக வாழ்வதாக கூறும் கணேஷ் வெங்கட்ராம், கணவன், மனைவி என்றால் இப்படித்தான் என்கிற சமுதாய அழுத்தம் தங்களிடம் இல்லை என பெருமையோடு கூறுகிறார். 2 வருடம் நிறைய இடங்களை சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டோம். பின்னர் திட்டமிட்டபடி குழந்தை பெற்றுக்கொண்டோம்.

எந்த முடிவுகளை எடுத்தாலும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம் எனக் கூறுகிறார். மனைவி நிஷா கர்ப்பமாக இருந்தபோது அவரை அன்போடு கவனத்துக்கொண்டேன். அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று நிறைய புத்தகங்கள் வாங்கிப் படித்தேன். என்ன குழந்தை பிறந்தாலும் ஆரோக்கியமாக பிறந்தால் போதும் என பேசிக்கொண்டாலும், பெண் குழந்தை பிறக்க வேண்டும் என மிக ஆவலாக இருந்ததாக கணேஷ் வெங்கட்ராம் கூறுகிறார்.

பொதுவாக குழந்தை பிறந்துவிட்டால் எல்லோரும் மனைவியை விட குழந்தை மீதுதான் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் பிரசவத்திற்கு பிறகுதான் மனைவியை அதிகம் நேசிக்க வேண்டும் என கூறுகிறார் கணேஷ் வெங்கட்ராமன். என்னுடைய வேலைக்கு கொடுக்கம் கவனத்தில் 2 மடங்கு குடும்பத்திற்கு கொடுக்கிறேன்.

நாங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. மற்றவர்கள் போல் வாழவேண்டும் என் யோசிக்க ஆரம்பித்தால் தேவையில்லாத தலைவலிதான் வரும். தற்போது வாழ்க்கை மிகவும் அமைதியாக செல்வதாக அழகான தமிழில் பேசினார் கணேஷ் வெங்கட்ராமன். மேலும் தமிழ்ப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டதால் தற்போது தமிழ் மேலேயும் காதல் அதிகம் வந்துவிட்டது என கூறும் கணேஷ் முறைப்படி தமிழ் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொண்டதாக கூறுகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.