நான் யாரை அண்ணானு கூப்டுறனோ.. அவங்க எல்லாம் உனக்கு மாமா..! மனைவி ராஜலெட்சுமிக்கு கணவன் செந்தில் கணேஷ் உத்தரவு..!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனுபவங்களை கிராமிய இசைப்பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.


புதுக்கோட்டை அருகே கரம்பக்குடி தன்னுடைய சொந்த ஊர் என தெரிவித்த செந்தில், அம்மா காட்டு வேலை, தோட்டத்து வேலை செய்வார்கள். நான் சிறுவனாக இருந்தபோது, எங்க வீடு களிமண்ணாலும், சுண்ணம்பாலும், வர்ணங்களாலும், புது களை வந்துடும். பொங்கலன்று, குளித்து புது உடை கட்டிக்கொண்டு, பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்குவோம்.

எங்களை வாழ்த்துவார்கள். பிறகு உறவினர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, பசங்களோட சேர்ந்து மாட்டுப் பொங்கலுக்காக மாடுங்களை அலங்காரம் செய்வோம் என தெரிவித்தார். கிராமங்களில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தவர்கள், ஒரு கட்டுக் கரும்பு, பச்சரிசி, வெல்லம், பொங்கல் வைக்க பானை, தேங்காய், வாழைப்பழம் வைத்து பொங்கல் சீரு கொடுப்பார்கள்.

பின்னர் ராஜலட்சுமி பேசியபோது, நான் திண்டுக்கல்லில் பிறந்தேன். பொங்கலன்று காலையில குளிச்சு புதுசு உடுத்தி, வீட்ல இருக்கிற தாத்தா, பாட்டி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவோம். அன்றுதான் எல்லா சொந்தக்காரங்களும் வருவார்கள். என் வீட்டுக்காரர், நான் யாரையெல்லாம் அண்ணன்னு கூப்பிடுறேனோ அவங்களை நீ மாமான்னு கூப்பிடு. நான் மாமான்னு கூப்பிடுறவங்க வயசானவங்களா இருந்தா அப்பான்னு கூப்பிடு, சின்ன வயசுக்காரங்களா இருந்தா அண்ணன்னு கூப்பிடு. கிராமங்கள்ல கட்டாயம் எல்லோரையும் உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடணும் என்று சொல்லிக்கொடுத்தார்.

நான் பிறந்த இடத்தில் அண்ணன், வயசானவங்கன்னா ஐயான்னு கூப்பிடுவேன். கிராமங்களில் ஏத்துக்க மாட்டார்கள் என திருமணத்திற்கு அப்புறம்தான் தெரிஞ்சது. இன்னிக்குதான் மொத முறையா ஒருத்தரைப் பார்க்கிறோம்னாலும் அவரை உறவுமுறை வெச்சுத்தான் கூப்பிடணும். எனக்குப் பொங்கல்னாலே இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வரும் என தெரிவித்தார்.