செந்தில் பாலாஜி வீசிய வலை! சிக்கிய மேலும் 2 எம்எல்ஏக்கள்! பீதியில் இபிஎஸ்!

அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் 2 பேர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை திமுகவில் வளைத்துப் போடும் முயற்சி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகவே அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திமுக தரப்பின் தொடர்பில் உள்ளனர். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு சமயத்தில் அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஸ்டாலினிடம் உறுதிமொழி அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் செந்தில் பாலாஜி மூலமாக மேலும் நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவின் தொடர்வதற்கு வந்தனர். அவர்களுடனும் தொடர்ந்து பேரம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி திமுகவிற்காக பிடித்து வைத்து உள்ளதாக சொல்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அந்த இரண்டு எம்எல்ஏக்கள் மே ஜெயலலிதா இருந்த போது கட்சியில் செல்வாக்குடன் இருந்தவர்கள். தற்போதைய மாவட்ட அமைச்சர்கள் ஆதிக்கம் காரணமாக அவர்கள் கட்சியிலும் சரி சட்டப்பேரவையிலும் சரி அமைதி காத்து வருகின்றனர். அந்த இரண்டு மாவட்டங்களிலும் திமுகவிற்கு என்று சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் இல்லை. எனவே மாவட்ட செயலாளர் பதவி திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி ஆகிய வாக்குறுதிகள் அளித்தால் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிக்க அவர்கள் இருவரும் தயார் என்று செந்தில் பாலாஜிக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் மிக ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏழு பேரை திமுக தன் பக்கம் திருப்பிய நிலையில் மேலும் 2 பேர் திமுக பக்கம் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.