சரண்டர் ராஜேந்திர பாலாஜி..! தற்காலிக மாவட்ட செயலாளர் பதவி. பதவிக்கு யார் காரணம் தெரியுமா?

நாக்கை வெட்டுவேன், ஊரைவிட்டு விரட்டுவேன் என்று எதுக்கெடுத்தாலும் திகுடுமுகுடாக பேசுவதில் கெட்டிக்காரரான ராஜேந்திரபாலாஜியை, ஓரமாக உட்காரவைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.


விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி இல்லையென்றால், கட்சியினர் யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்ட ராஜேந்திரபாலாஜி, தொடர்ந்து எடப்பாடி வீட்டுக்கும், வேலுமணி வீட்டுக்கும் நடையாய் நடந்து பார்த்தார்.

அதன்பிறகு பன்னீருக்கு தூதுவிட்டார். அது மட்டும் போதாது என்று பா.ஜ.க. மேல்மட்டத் தலைவர்கள் சிலருக்கும் தூதுவிட்டு, எப்படியாவது அந்த பதவியை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடினார்.

பழனிசாமியை மகிழ்விப்பதற்காக அடிக்கடி ஸ்டாலினை மட்டம்தட்டி அறிக்கை விட்டார். இந்த நேரத்தில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து கண்ணீர் விட்டாராம். அவரும் எடப்பாடியிடம் தகவலை தெரிவித்து, ஒரு வாய்ப்பு கொடுங்க, அவர் சரண்டர் ஆயிட்டார் என்று கூறினாராம்.

அதையடுத்து, அடுத்து ஒருவர் நியமனம் செய்யும் வரையிலும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தக்கவைப்பாரா அல்லது மீண்டும் வெட்டிப் பேச்சு பேசி கெடுத்துக்கொள்வாரா என்பதை பார்க்கலாம்.