எனக்காக அந்த நடிகர் அடி உதை எல்லாம் வாங்கியிருக்கான்! சீனியர் நடிகை நளினி சொல்லும் சீக்ரெட்!

எனக்காக அவர் அடி உதை எல்லாம் வாங்கினார். தனது சுவாரசியமான காதல் கதையை பொது நிகழ்ச்சி ஒன்றில் கூறிய பிரபல நடிகை நளினி.


தமிழ் திரையுலகில் 1980களில் மிகவும் பிரபல நடிகையாக இருந்தவர் நளினி, இவர் தனது பள்ளிப் பருவத்திலிருந்தே நடத்து வருகிறார். வருடத்திற்கு சுமார் 24 படங்கள் வரை அதிகப்படியாக நடித்துள்ளார் .தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்கள் நடித்தவர் என்ற பெயரையும் பெற்றவர்.

இவரும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான ராமராஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு அருண் மற்றும் அருணா என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அதன் பிறகு நளினி வெள்ளித்திரையை விட்டு சின்னத்திரைக்கு மாறியுள்ளார். இதையடுத்து பல்வேறு மெகா சீரியல்கள் மற்றும் குறும் தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் காதல் டூ கல்யாணம் வரை பேசியுள்ளார்.

அப்போது நான் நடிகையாக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ராமராஜன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு என் மேல் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு நாள் படப்பிடிப்பின்போது நான் அணிந்திருந்த உடையை பார்த்து இந்த உடையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், நாளையும் இதே மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என கூறினார் .

அப்போது எதார்த்தமாக நானும் மறுநாள் அதே மாதிரியான உடையில் வந்தேன். இதனால் தான் சொல்லித்தான் உடை அணிந்து வந்துள்ளார், என எண்ணி என் மேல் காதல் அதிகரித்ததால் இதையடுத்து அடுத்த படமான மனைவி சொல்லே மந்திரம் படப்பிடிப்பின்போது பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு அவருக்கு குங்குமம் கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது தனது கையில் மருதாணி இருப்பதால் நீங்களே வைத்து விடுங்கள் எனக் கூறினேன் இதையடுத்து அவரும் எனக்கு குங்குமம் வைத்துவிட்டார். அப்போது அவருக்கு என் மீது அதிகப்படியான அன்பு மற்றும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எங்களது வீட்டுக்கு சென்று என்னைப் பெண் கேட்டுள்ளார் அப்போது எங்கள் வீட்டார் அவரை அடித்து உதைத்து அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அவரும் தன்னிடம் வந்து இதைக் கூறினார் அப்போது நான் மிகவும் மனம் வருந்தினேன் எனக்காக ஒருவர் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அடி வாங்கியதால் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இந்நிலையில் எனக்காக எவ்வளவு தூரம் வந்தவரை நான் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எண்ணி அவரை மணம் முடிக்க முடிவு செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது பின்னர் திருமணத்திற்குப் பிறகுதான் நான் எனது கணவர் ராமராஜனை காதலிக்க ஆரம்பித்தேன் புன்னகையுடன் நளினி கூறியுள்ளார்.