தமிழ்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை நீ! திருமாவை உயர்த்திப் பிடித்த சீமான்! காரணம் இது தான்!

தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை, எளிய பின்புலத்தில் இருந்து உயர்ந்த தலைவன் என்று திருமாவளவனை சீமான் புகழ்ந்துள்ளார்.


இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஆதித்தமிழ் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் கலங்காதவர்.

 தனது ஒப்பற்ற செயல்திறத்தாலும், மங்காத போராட்ட உணர்வினாலும் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதி பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை நீங்கள்.

 அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்! இவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் சீமான் கூறியுள்ளார். பிறந்த நாள் வாழ்த்து தானே தவிர வேறு ஒன்றும் இல்லையாம்.