காருக்குள் ரகசிய அறை! கட்டு கட்டாக சிக்கிய ரூ.2 கோடி! போட்டு கொடுத்த திமுக! வசமாக சிக்கிய திருமா!

திருமாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்... பணத்தைக் காட்டிக் கொடுத்தது தி.மு.க.வினரா..? சிதம்பரத்தில் தேர்தல் ரத்து அபாயம்


சனாதன மாநாடு நடத்தி பா.ஜ.க.வை எதிர்க்கிறேன் என்று ஒட்டுமொத்தமாக இந்துக்கள் மீது கோபத்தைக் காட்டினார் திருமாவளவன். அதனால், அவர் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் இந்துக்கள் கேள்வி மீது கேள்வி கேட்டனர். அதையடுத்து வேறு வழியே இன்றி நெற்றியில் விபூதி பூசி... திடீரென ஆன்மிக அவதாரம் எடுத்தார். சிதம்பாம் நடராஜர் கோயிலுக்குச் சென்றுவந்தார்.

இந்த நிலையில், சிதம்பரம் தொகுதிக்கு தேர்தல் செலவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட 2கோடி ரூபாய் பிடிபட்டிருப்பது, திருமாவுக்கு பெருத்த தலைவலியை உருவாக்கியுள்ளது. பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் காரில் பல கோடி ரூபாய் பணம் கொண்டு வருவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரம்பலூர்-அரியலூர் சாலையில் பேரளி எனுமிடத்தில் டாடா சபாரி வாகனத்தை சோதனையிட்டதில் விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். இரண்டு மணி நேரம் காரை சோதனையிட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காரைக் கொண்டு சென்று சோதனையிட்டனர். ஏனென்றால், காருக்குள் பணம் இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்திருந்தது.

அதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்குலம் அங்குலமாக சோதனை போடப்பட்டது. அப்போது காரின் கதவு உட்புற தகடுகளைக் கழற்றிய போது கட்டுக்கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 2 கோடியே 10 லட்சம் ரூபாயாகும். இதையடுத்து பணத்தை கொண்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை மற்றும் மாநில பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. எங்கிருந்து, யாருக்காக இந்தப்பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து தங்கத்துரையிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்ரூவர் ஆகிவிட்டால் எந்த வழக்கு பிரச்னையும் இருக்காது என்று சொல்லப்படுவதால், அவர் அப்ரூவர் ஆகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.

ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து இந்தத் தகவல் போலீசாருக்கு கிடைத்ததை அடுத்தே சோதனையிடப்பட்டது. இந்தத் தகவல் கொடுத்தது தி.மு.க.வினர் என்று சொல்லப்படுவதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு முக்கியப் புள்ளியை மிரட்டி வாங்கப்பட்டதாகவும், அந்த நபரே ஐ.ஜி. அலுவலகத்திற்கு தகவல் சொல்லியதாகவும் கூறப்படுகிறது