ஆசைப்பட்டது கிடைக்கல! ஆடு மேய்க்கச் சென்ற மாணவி! ஆனால் பிறகு நிகழ்ந்த அதிசயம்! தூத்துக்குடி சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தான் கேட்ட பாடப்பிரிவு கிடைக்காததால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடி ஆடு மேய்த்து வந்துள்ளார். இதையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் அம்மாணவியை அவர் கேட்ட பிரிவில் பள்ளியில் சேர்த்துள்ளார். அதைப்பார்த்து அதே பள்ளியில் பயிலும் 5 மாணவர்களும் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுக்கு தங்களை மாற்றி விடும்படி தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருபவர் வைஷ்ணவி இவர் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பிற்கு தனக்கு பிடித்த வரலாறு பாடத்தை எடுத்து படிக்க விரும்பியுள்ளார். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வைஷ்ணவி வரலாற்றுப் பாடப் பிரிவு கேட்டபோது வரலாற்றுப் பாடத்தில் போதிய அளவு மாணவர்கள் சேர்ந்து விட்டனர். இப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனினும் வைஷ்ணவியை கணிப்பொறி இயல் பாடப்பிரிவில் தலைமையாசிரியர் சேர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் மாணவி விரும்பிய பாடம் அவருக்கு கிடைக்காததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான வைஷ்ணவி சில நாட்கள் கணிப்பொறி இயல் பாடப்பிரிவில் படித்துள்ளார்.தனக்கு பிடிக்காத படிப்பை படித்து வரும் மாணவி திடீரென பள்ளிக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். பல நாட்களாக பள்ளிக்கு வராத நிலையில் அவரது நண்பர்கள் அம்மாணவியை பார்க்கச் சென்றபோது அவர் தனது வீட்டில் உள்ள ஆடுகளை வெளியே கொண்டு சென்று மேய்த்துவிட்டு மாலையில் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது அதை பார்த்த அவரது சக மாணவர்கள் ஏன் நீ பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டாய்? எனவும் ஏன் ஆடு மேய்க்க சென்று விட்டாய் ?என கேட்டுள்ளனர் .அதற்கு வைஷ்ணவி தனக்கு பிடிக்காத பாட பிரிவினை படிக்க விருப்பம் இல்லாததால் தான் இவ்வாறு செய்கிறேன். என மாணவர்களிடம் பதிலளித்துள்ளார். இதையடுத்து இந்த செய்தியானது சமூக சேவகரான வரதராஜன் என்பவருக்கு தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியின் படிப்பு பாலானதை அறிந்த வரதராஜன் உடனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுகுறித்து செய்தி அனுப்பியுள்ளார். இதை உடனே விசாரணை செய்த மாவட்ட கலெக்டர் சந்திப் உடனே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு அந்த மாணவியை திரும்பவும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவி கேட்கும் பாட பிரிவினையை மாணவிகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைஷ்ணவியை பள்ளிக்கு வரும்படி பள்ளியில் இருந்து அழைப்பு விடுத்துள்ளனர்.அவர் கேட்கும் பாடப்பிரிவினையே அவருக்கு வழங்கப்படும் எனவும் பள்ளி தலைமை ஆசிரியர் அங்கிருக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அப்பள்ளியில் பயிலும் 5 மாணவர்கள் தாங்கள் இப்பொழுது பயின்றுவரும் பிரிவு தங்களுக்கு பிடிக்க வில்லை எனவும் தங்களுக்கும் வேறு ஒரு பாடப்பிரிவை மாற்றி தர வேண்டும் என பள்ளியிலிருந்து நின்று கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அவர்கள் விரும்பிய பாடத்தை வழங்குமாறும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.