தலைகீழாக கவிழ்ந்த பள்ளி பேருந்து! தூக்கி வீசப்பட்ட மாணவன், டீச்சர்! பதற வைக்கும் சிசிடிவி. காட்சி!

எதிர்பாராத சாலை விபத்தினால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து. அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய மாணவன் மற்றும் ஆசிரியை


எதிர்பாராத சாலை விபத்தினால் கவிழ்ந்த தனியார் பள்ளி  பேருந்து. அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய மாணவன் மற்றும் ஆசிரியை கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து நேற்று சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது.

சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நடுவே இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் சிறுவன் ஆகியோர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.

இதன் சி சி டிவி காட்சிகள் பேருந்தின் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.