திருமணம் ஆகி மூன்றே வாரத்தில் ஆர்யாவை தவிக்க விட்டு சென்ற மனைவி சயீசா!

நடிகர் ஆர்யா, சாயிஷா இவர்களுக்கு கடந்த மார்ச் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தது.


திருமணம் முடிந்த கையோடு கன்னட படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சாயிஷா. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரானார் ஆர்யா மற்றும் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்யப்போவதாக காதலர் தினத்தன்று தெரிவித்துள்ளனர்.

இவர்களின் திருமணம் கடந்த மார்ச் 10 அன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது பல்வேறு சினிமா பிரபலங்கள் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் இணையதள பக்கத்தில் ஆர்யா மற்றும் சாயிஷாவின் ஹனிமூன் சென்று வந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார் சாயிஷா.

இதைத் தொடர்ந்து கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான சந்தோஷ் ஆனந்தராம் இயக்கும் படத்தில் சாயிஷா புக் ஆகியுள்ளார். இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகையான ராதிகாவும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவுள்ளார்.சாயிஷா தற்போது பெங்களூரில் உள்ள நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

திருமணம் ஆகிய மூன்று வாரங்களே ஆன நிலையில் கணவன் ஆர்யாவை தவிக்க விட்டு விட்டு சயிசா படப்பிடிற்கு புறப்பட்டுள்ளார். இதனால் ஆர்யா கவலையில் உள்ளாராம்.