படுக்கைக்கு வர மறுப்பு! கள்ளக்காதலியின் தாய்க்கு கள்ளக் காதலனால் ஏற்பட்ட கொடூரம்!

கள்ளக்காதலி படுக்கைக்கு வர மறுத்த ஆத்திரத்தில் அவரது தாயை வெட்டிக் கொன்ற நபரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த சந்தானம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மின்னல்கொடி என்ற பெண்ணுக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு சந்தானம் மற்றும் மின்னல்கொடிக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் மின்னல்கொடி சந்தானத்திடம் பேசுவதை குறைத்துக கொண்டுள்ளார்.

.இதனால் ஆத்திரமடைந்த சந்தானம் நேற்று இரவு மின்னல் கொடியை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மின்னல்கொடியை சந்தானம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு மறுத்த மின்னல் கொடி சந்தானத்துடன் சண்டையிட்டுள்ளார்.

இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து  சந்தானம் மறைத்து வைத்த அரிவாளை எடுத்து மின்னல்கொடியை வெட்டச்சென்றுள்ளார். அதைப் பார்த்து பயந்து மின்னல்கொடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டாள். 

பின்னர் சந்தானம் மின்னல்கொடியை தேடி பக்கத்து தெருவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று தேடியுள்ளார். அங்கு சென்ற பிறகு மின்னல்கொடியின் தாயார் சுப்புத்தாய்க்கும் சந்தானத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சந்தானம் தான் வைத்திருந்த அரிவாளால் சுப்புதாயை வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் தகவல் அறிந்த போலீசார் சந்தானத்தை தேடி வருகின்றனர்.