தனது செல்ல மகளை முதன்முதலாக வீடியோவில் காட்டிய நடிகர் சந்தானம் !

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொடர்களில் காமெடியனாக அறிமுகமாகி அதன் பின்னர் பெரிய திரையிலும் காமெடியனாக அசத்தி கிட்டத்தட்ட ஜாம்பவான்கள் லெவலுக்கு சென்றவர் நடிகர் சந்தானம்.


தற்போது கடந்த சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தில்லுக்குதுட்டு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் நடித்து வரும் அவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் துவக்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தானம் தன் மகளுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தான் பேசிய காமெடி வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதன்முதலாக தனது மகளை ஒரு வீடியோவில் காட்டியுள்ள சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.