கட்டிய தாலியுடன் வியர்க்க விறு விறுக்க நடையைக் கட்டிய சமந்தா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல நடிகை சமந்தா வியர்க்க விருவிருக்க கட்டிய தாலியுடன் நடந்து சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.


பிரபல நடிகை சமந்தா அண்மையில் நடித்து வெளியான சூப்பர் டீலக்ஸ் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமந்தா நடிப்பில் விரைவில் மஜ்லி என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது‌. மஜ்லி திரைப்படத்தில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார்.

அதாவது திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் சமந்தா சேர்ந்து நடித்துள்ள முதல் திரைப்படம் இதுதான். இந்தத் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் சமந்தா இப்படி ஒரு காரியத்தில் இறங்கியுள்ளார். அதாவது திருப்பதியில் நடை பயணமாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதற்காக மேக்கப் எதுவும் செய்யாமல் கட்டிய தாலியுடன் இயல்பான ஒரு சுடிதார் அணிந்து சமந்தா அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து சென்றார். இதனால் அவர் உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சமந்தா மலையில் ஏறி ஏழுமலையானை தரிசித்து விட்டுச் சென்றார்.

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் சேர்ந்து நடித்துள்ள மஜ்லி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே சமந்தா இப்படி நடைபயணமாக சாமி தரிசனம் செய்து வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.