தாலி கட்டும் நாளில் மணமகனை கைது செய்த மணமகள்..! மேட்டூர் சம்பவம்! என்னாச்சு தெரியுமா?

சேலத்தில் வாலிபர் கைது, குற்றம் பெண்ணின் மனதை திருடியது தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்ற வரிகளுடன் சற்று வித்தியாசமாக திருமண பேனர் அச்சுட்டுள்ள பேனரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.


சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இதற்காக மணமகனின் உறவினர்கள் திருமண விழாவிற்காக அனைவரும் போல் இல்லமால் சற்றி வித்தியசமான பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அந்த பேனர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அப்படி என்னவென்று பார்த்தால் அந்த பேனரில் திருமண விழாவிற்கு பதில் வாலிபர் கைது என்றும், குற்றம் பெண்ணின் மனதை திருடியது என்றும், தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் அதில் இருந்தது.

இதனை கண்ட பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் இதனை சமூக வளைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.