பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஆவேசமாக கத்தியை எடுத்த ரவுடி! படாத இடத்தில் பட்டு துண்டான பரிதாபம்!

குடும்பத்தகராறு காரணமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்ற இளைஞர் தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.


சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். இவருக்கும் சரிதாவிற்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே மனோகர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்து விட்டு மனைவி சரிதாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். 

அதனால் இரண்டு மாதத்திற்கு முன்பு, அயனாவரத்தில் இருக்கும் தாய் சம்பூர்ணம் வீட்டிற்கு சரிதா சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று சம்பூரணம் வீட்டிற்கு சென்றுள்ள மனோகரன், அங்கு தகராறு செய்திருக்கிறார். மேலும் சரிதாவின் அக்காவிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்டித்த சம்பூரணம் மீது கத்தியை நீட்டி உள்ளார் மனோகரன். 

இதனால் ஆத்திரமடைந்த சம்பூரணம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் மனோகரனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். போலீசாரிடம் அவதூறாக பேசியுள்ளார் மனோகரன். இதனால் பயந்து போன சம்பூரணம் தான் பணிபுரிந்து வந்த ஹோட்டல் கேஷியரிடம் உதவியை நாடி உள்ளார். 

கேஷியர் ராகவேந்திரன் உடனடியாக தன் வீட்டிற்கு வந்து தங்குமாறும், இங்கிருந்து காவல் நிலையத்திற்கு செல்லலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பூரணம் மற்றும் சரிதா இருவரும் அங்கு சென்று கொண்டிருக்கையில், திடீரென வழிமறித்த மனோகரன் அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். 

இதனைக்கண்ட ராகவேந்திரா மற்றும் உடன்வந்த சீனிவாசன் இருவரும் மனோகரனை தடுக்க முயற்சித்தனர். அப்போது இடுப்பில் வைத்திருந்த கத்தியை வெளியே எடுக்க முயற்சித்த மனோகரன் தவறுதலாக வயிற்றை கிழித்துக் கொண்டார். காயம் சற்று ஆழமாக இருந்ததால் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 

அப்போதும், எதிரில் இருந்த ராகவேந்திரனின் நெஞ்சில் வேகமாக கத்தியை குத்திவிட்டு அதே இடத்திலேயே மயங்கி இருக்கிறார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். போலீசார் மனோகரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரிதா, சம்பூரணம் மற்றும் சீனிவாசன் ஆகியோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.