ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் 'ஊறுகாய் அம்மையார்' என்று குறிப்பிட்ட விமர்சனத்தை வைத்து, பா.ஜ.க. விமர்சகர்கள் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு காரசாரமான பதிவு வெளியிட்டுள்ளார். .
நீதியரசர் சந்துருவும், ஊறுகாய் மாமியும்..?
ராகுல்காந்தியை பப்பு என்றும்.. மன்மோகனையும் சோனியாவையும் எந்த மாதிரியான வார்த்தைகளையெல்லாம் வீசி பாஜகவினர் இழிவு படுத்தி பேசினார்கள் என்பதையெல்லாம் பார்த்தவர்கள் நாம். அப்படிப்பட்ட சங்கிகள், 'ஊர்காய் அம்மையார்' என்று சந்துரு அவர்கள் என்று விமர்சித்ததற்காக ஒரு பெண்ணை.. அமைச்சரை இப்படி சொல்லலாமா என்று அழுகாச்சி காவியம் படிக்கிறார்கள்..
தமிழ்நாட்டின் நேர்மையான மிகச்சிறந்த நீதியரசர்களில் ஒருவரான சந்துரு அவர்கள் வைத்த விமர்சனத்தில் சங்கிகள் கொதிக்கும் அளவிற்கு ஒரு தவறும் இல்லை. ஊறுகாய் போடுவது எப்படி என்றும் சூரியனுக்கு வடை படையல் போடுவதும் என்று இருக்கும் அமைச்சரை அவர் பதிவின் அடிப்படையில் அடையாளப்படுத்துவது ஒன்றும் தவறு அல்ல..
உடனே ஒரு பெண் என்றும் பாராமல்... என்று இழுக்கிறார்கள்.. இங்கு பிரச்சினை இதுதான்.. அரசியல் எனும் பொது தளத்திற்கு வரும்போது அரசியல்ரீதியாக பல வகையான விமர்சனங்களும் வரத்தான் செய்யும்.. உடனே பெண் அரசியல்வாதிகளும், தலித் அடையாள அரசியல்வாதிகளும் "ஐயோ நான் பெண்..." "ஐயோ நான் தலித்.." என்று அப்பாவி முகமூடிக்குள் போய் ஒளிந்து கொள்ளும் தந்திரத்தை செய்கிறார்கள்..
இந்த சிக்கலை கார்ட்டூனிஸ்ட்டுகள் அதிகமாகவே எதிர்கொள்கிறோம்.. இதனாலயே பெண்களை விமர்சிக்கும்போது கூடுதல் கவனமாக வரைய வேண்டியிருக்கிறது. சந்துரு அவர்கள் குறிப்பிட்ட ஊறுகாய் அம்மையார் என்பது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் ஊறுகாய்போல் விற்றுவரும் அமைச்சரை நோக்கிய அரசியல் விமர்சனமே.. அதில் ஒரு தவறும் இல்லை.
ஆகவே இனிமேல் அவரை ஊறுகாய் அம்மையார் என்றே அடையாளப்படுத்துவோம் என்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா.