மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு…! கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி.மு.க. அமைச்சர்கள்.

கவர்னர் உத்தரவு கொடுத்தபிறகே, மருத்துவக் கல்விக்கு கலந்தாய்வு நடைபெறும் என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது. ஆகவே, மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது.


இந்த நிலையில் இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை 5 அமைச்சர்கள் இன்று சந்தித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம் ஆகியோர் கவ்வர்னரை சந்தித்தனர். 

அப்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு அனுப்பிய உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்தம் மீது காலம் தாழ்த்தாமல் முடிவு எடுப்பார் என நம்பப்படுகிறது.,

தமிழக அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் முடிவு எடுக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.