அத்திவரதர் நிம்மதியாக குளத்தில் ரெஸ்ட் எடுத்துவருகிறார். ஆனால், அதை எப்படியாவது பஞ்சாயத்து கிளப்பவேண்டும் என்று ஒருசிலர் எதையாவது பேசி வருகிறார்கள். அப்படித்தான் ரங்கராஜ் பாண்டே, ‘ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள், அதன்படியே செயல்பட வேண்டுமென்று திடமாக நம்புகிறேன்... அதேசமயம், அத்தி வரதர் எந்த ஆகமத்தின் அடிப்படையில் குளத்தில் வைக்கப்பட்டார் என அறிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று ட்வீட் போட்டுள்ளார்.
அத்திவரதருடன் ரங்கராஜ் பாண்டேவுக்கு என்ன தகராறு? அவரை நிம்மதியா தூங்க விடுங்க சாரே...

இதற்கு கடுமையான ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. அவருக்குப் பதில் அளிகும் வகையில், ‘தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. அத்திவரதர் ஏன் நிரந்தரமாக வசந்த மண்டபத்தில் காட்சி தரவில்லை என்ற கோபம் எழுத்தில் தெரிகிறது.
ஆனால் அவர் பிரம்மதேவரின் யாகத்தில் தோன்றியவர் என்பதால் அவரது உடல் வெப்பம் தாங்காது. அதனால்தான் அனந்த சரஸ் குளத்தில் சயனம் கொண்டுள்ளார். உங்களைப்போல் நானும் ஆதங்கப்பட்டு, பின்னர் புரிந்து கொண்டு அமைதியாகி விட்டேன்’ என்று பதில் அளித்துள்ளார் ஒருவர்.
அதேபோன்று, ‘சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் போகக் கூடாது என்பது எந்த ஆகமத்திலும் கிடையாது. பல்வேறு ஆலயங்களில் பல்வேறு நடைமுறைகள் ஒன்றுக் கொன்று மாறுபடுகின்றன. இவையெல்லாம் ஆகமத்திற்குள் அடங்குவதில்லை.
அவ்வாறு நெடுங்காலமாக விளங்குகின்ற ஒரு ஐதீகம், பாரம்பரியம், தேவகட்டளை போன்ற விஷயங்களை ஆகமத்தில் தேட முடியாது. ஆபத்து காலத்தில் அத்தி வரதர் ஜல சயனம் செய்யப்பட்டு இருக்கின்றார். இது ஆகம நடைமுறையா? என்றால் கிடையாது. தேவ கட்டளை.
பின்னர் மற்றொரு மூலவரை பிரதிஷ்டை செய்து இருக்கின்றார்கள்.
ஒரு ஆலயத்தில் ஒரு மூலவர்தான் இருக்க வேண்டும் என்பதால் அத்திவரதர் நிரந்தரமாக ஜலவாசத்தால் வைத்திருக்கின்றார்கள். இதில் எதிலும் ஆகம ஒப்பாய்வு பார்க்க கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
எப்படியோ பிரச்னை செய்வது மட்டும்தானே பாண்டேவின் வேலை.