விஜயை வைத்து மெர்சல் படம் எடுத்த பெண் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..! அவரே வெளியிட்ட பகீர் தகவல்!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் சூரியகாந்தி ரீபைண்ட் ஆயிலுக்கு பதிலாக கடலை ரீபைண்ட் ஆயில் சாப்பிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி. பிறகு நேர்ந்த விபரீதம் குறித்து நான் 'மறுஜென்மம் எடுத்திருக்கேன்' என ரீபைண்ட் ஆயில் அவருக்கு ஏற்பட்ட அலர்ஜி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.


தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமானா ஹேமா ருக்மணி என்பவர் அந்த நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான நபராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் வேலை விஷயமாக எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர் ஹேமா ருக்மணி.

இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது இப்போதுதான் 'நான் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறேன்' என பேச ஆரம்பித்து அவர் தனக்கு ஏற்பட்ட 'நட் அலர்ஜி'குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது அலர்ஜி என்பது அவ்வளவு பெரிய கொடிய நோய் கிடையாது அவரவர் உடலுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக்கொண்டால் அலர்ஜியில் இருந்து சுலபமாக தப்பித்துவிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலில் தனக்கு கடல் உணவுகளில் அலர்ஜி ஏற்பட்டு வந்ததால் கடல் உணவுகளை உண்பதை தவிர்த்து விட்டேன் எனவும் தற்போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவர் பந்தியில் அமர்ந்துள்ளார். இதையடுத்து உணவு பரிமாற வருபவர்களிடம் இந்த உணவு சமைக்க எந்த ஆயில் பயன்படுத்தியுள்ளீர்கள் என கேட்டபோது அதற்கு அவர்கள் ரீபைண்ட் ஆயில் என கூறியுள்ளனர்.இந்நிலையில் அது சூரியகாந்தி ரீபைண்ட் ஆயில் என நினைத்து தானும் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்ததும் முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே மருத்துவரிடம் சென்று காட்டியபோது அதற்கு அவர் இது ஒரு விதமான அலர்ஜி எனவும் கடலை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு சேராமல் இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அலர்ஜி ஏற்பட்டதால் எனது உடலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து எடைபோடும் மெஷினில் போய் பார்த்தபோது ஒரே இரவில் 4 கிலோ எடை கூடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் ஹேமா ருக்குமணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனே மருத்துவரை அணுகி அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துள்ளார்.இதையடுத்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்த போது உடம்பில் அதிகப்படியான நீர் கோர்த்துள்ளது அதற்கு இன்ஜெக்சன் போட வேண்டும் எனவும் கூறி இன்ஜெக்சன் போட்டுள்ளனர். பின்னர் உடனே ரத்த அழுத்தம் குறைந்து மயக்க நிலைக்கு வந்ததாகதெரிவித்துள்ளார்.எனவே இந்த மாதிரியான பிரச்சனைக்கு மருத்துவத்துறையில் அனப்லேடிக் ஷாக் எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தகுந்த சிகிச்சை எடுத்து வருவதால் உடல் மெல்ல மெல்ல சரியாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஹேமா ருக்குமணி கூறியுள்ளார். இதையடுத்து இந்த மாதிரியான அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி அதற்கான தகுந்த சிகிச்சை எடுத்து பயன்பெறுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே இதை நான் தெரிவித்ததாக கூறியுள்ளார்.