நிஜமாவே காந்திஜி தற்கொலைதான் செய்துக்கிட்டாராம்! இதை கோட்சேவே சொல்லியிருக்காராம்!

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால், அது உண்மை என்றாகிவிடும் என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ பா.ஜ.க.வுக்கு மிகவும் நன்றாகத் தெரிகிறது.


அதனால்தான் மீண்டும் மீண்டும் காந்தியை வம்புக்கு இழுத்துவருகிறார்கள். காந்திக்கு மக்களிடம் இருக்கும் நல் மதிப்பை எப்படியாவது குலைக்க வேண்டும் என்பது மட்டும்தான் பா.ஜ.க.வின் நோக்கம். அதற்காகத்தான் படேலுக்கு மரியாதை கொடுப்பதும், காந்தியை ஓட ஓட விரட்டுவதும். இதில் ஒரு பகுதியாகத்தான் காந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்.

குஜராத்தில் பள்ளிகளுக்கிடையேயான போட்டி ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.. ‘காந்திஜி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ இத்தனை அறிவுபூர்வமான கேள்வி சாதாரணமாக ஆசிரியர் முளையில் உதித்திருக்க வாய்ப்பே இல்லை, திட்டமிட்டுத்தான் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

இந்தக் கேள்வி குறித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி கண்டனத்துக்கு உள்ளான நிலையில், குஜராத் மாநில கல்வித் துறை அதிகாரிகள், ‘இந்தக் கேள்வி ஆட்சேபணைக்குரியது. இதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறோம். விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்’ என்றவர், 

பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களில் விசாரணை அறிக்கை எப்படிப்பட்டதென்று நாடறியும். நிச்சயம். அதனால் அந்தப் பள்ளிக்கும் கேள்வி தயாரித்தவருக்கும் பரிசும் பாராட்டுகளும் கொடுக்காமல் இருந்தால் சரிதான்.