இவன் தான்யா போலீஸ்! பற்றி எரிந்த வீட்டிற்குள் சென்று சிலிண்டரை எடுத்து வந்த செம தில்!

வீடு தீப்பற்றி எரிந்த நிலையில் உள்ளேசிலிண்டர் இருப்பதை அறிந்து உள்ளே சென்று அதனை எடுத்து வந்து மிகப்பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார் காவல் துறை அதிகாரி ஒருவர்.


உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா..அலம்கானி என்ற பகுதியில் கீதா- புல்சிங் தம்பதியருக்கு சொந்தமான வீடு தீப்பிடித்துக்கொண்டது. பற்றி எரியும்போது அங்கே போலீஸ் எஸ்ஐ அகிலேஷ் குமார் தீக்சித் விரைந்துள்ளார். 

எல்லோரும் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இரண்டு ஃபுல் எல்பிஜி சிலிண்டர்கள் இருப்பது தெரியவருகிறது.

அவை வெடித்தால் சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு பெரும் ஆபத்து என்றும் தெரிகிறது. உடனே எதைபற்றியும் கவலைப்படாமல் இரண்டு போர்வைகளை வாங்கி உடம்பில் சுற்றிக்கொண்டு எரியும் வீட்டுக்குள் போய் இரண்டு சிலிண்டர்களையும்  அலேக்காக தூக்கி வந்தார் அகிலேஷ்.

நொய்டா போலீசார் இந்த செய்தியை கம்பீரத்துடன் டிவிட் செய்தியிருக்கிறார்கள். உண்மையில் இவர் தான் காவல்துறையினரில் தீரன்.