ராமருக்கு மத்த ஜாதி ஆட்களைப் பிடிக்காதா..? ஏன் கமிட்டியில் யாரும் இல்லை? டென்ஷனாகும் உமா பாரதி.

பா.ஜ.க.வின் சார்பாக அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு டிரஸ்ட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த டிரஸ்டியில் ஒரே ஒரு தலித் தவிர மற்ற ஜாதியனர் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. ஏல்லாமே உயர் ஜாதி வகுப்பினர் மட்டுமே நிரம்பியுள்ளனர். இதுதான் இப்போது கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் கடும் கோபமடைந்துள்ள உமா பாரதி, கல்யாண் சிங் போன்ற ஓபிசி பிரிவை சார்ந்த சங் பரிவார் தலைவர்கள், வெளிப்படையாக தங்களின் குமுறலை, தாங்கள் ஒதுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க துவக்கியுள்ளார்கள்..

ராம ஜென்மபூமி பாபரி மஸ்ஜித் போராட்டங்கள் நடைபெற்றபோது, அதை களத்தில் முன்னின்று நடத்தியது ஓபிசி தலைவர்களான உமா பாரதி, வினய் கட்டியார், கல்யாண் சிங்... அது தொடர்பாக நடந்த கலவரங்களில் பாதிப்படைந்தது ஓபிசிக்கள், ஆனால், இப்போது கோயில் கட்ட அமைக்கப்படும் டிரஸ்ட்டில், ஓபிசிக்கள் புறக்கணிக்கப்படுவதா?? என உமா பாரதி, கல்யாண் சிங்க்கும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்..

போராடுவதற்கும், குண்டு பட்டு சாவதற்கும் மட்டும் பிற ஜாதியினர் வேண்டும், கமிட்டியில் இடம் கிடையாதா என்று போராடுகிறர்கள். இதற்கெல்லாம் செவி சாய்ப்பாரா ராமன்?