ராமதாஸை திட்டுனாலும் சொரணை இல்லையே! வீதிக்கு வரும் தர்மபிரபு விவகாரம்!

கடுமையான எதிர்ப்பு கிளம்பும், அதன்மூலம் பப்ளிசிட்டி கிடைக்கும், படம் பிக்கப் ஆகும் என்ற எண்ணத்துடன் வெளியான படம்தான் தர்மபிரபு. இல்லையென்றால் யோகிபாபுவை ஹீரோவாக போட்டு படம் ஆரம்பிப்பார்களா என்ன?


பன்னீர் தொடங்கி பா.ஜ.க.வின் சோ வரையிலும் கேவலத்திலும் கேவலமாக காறித் துப்பியிருக்கிறார்க்ள். ஆனாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் இப்போது ராமதாஸை கேவலமாக காட்டியிருக்கிறோம், அவர் கட்சியினர் கூட இதை கண்டுகொள்லவில்லையே என்று படக்குழுவினர் ஆச்சர்யப்படுகின்றனர்.

இன்னும் எப்படியெல்லாம் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்? பன்னீர், பாரதப்பிரதமர் மோடி தொடங்கி பா.ம.க.வின் ராமதாஸ் வரையிலும் நேரடியாகவே கிண்டல் செய்திருக்கிறார்கள்.  திருள்ளுவரை கேவப்படுத்தும் காட்சிகள் உள்ளது. சிவனை படு கேவலமாக சித்தரித்து உள்ளார்கள். பெரியார் நல்லவர் போன்று காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. 

சிவனை மரியாதை இல்லாமல் எமன் பேசுவதாக உள்ளது, அதே நேரம் இயேசு கிறிஸ்துவை மரியாதையாக பேசுவதாக காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் ஏராளமான அரசியல் சலசலப்பு இருக்கும் நிலையிலும், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை என்பதுதான் வேடிக்கை. எப்படியாவது போராட்டம் நடத்துங்கப்பா, இல்லைன்னா படம் ஓடாது என்று படக்குழுவினர் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டார்கலாம்.