புதுச்சேரியுடன் கடலூர், விழுப்புரத்தை சேருங்க..! அன்புமணியை முதலமைச்சராக்க குறுக்கு வழி! ராமதாஸின் அடடே பிளான்!

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்துவருபவர் டாக்டர் ராமதாஸ்.


இப்போது அவரது சிஷ்யர்கள் அடுத்து ஒரு கோரிக்கையை வைத்து, தமிழகத்தை அதிர வைத்துள்ளனர்.ஆம், பாட்டாளி மக்கள் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ் பத்திரிகையாளர்களிடம் இந்த விவகாரத்தைப் பற்ற வைத்தார். அதாவது இப்போது இருக்கும் சிஷ்டப்படி புதுவை மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வாய்ப்பே இல்லையாம். அதனால், புதுவை நலனுக்காக பல்வேறு தீட்டங்களை இன்று முன்வைத்து அதிர வைத்துள்ளார்.

அவருடைய கோரிக்கை படி, புதுவையோடு இணைந்துள்ள 4 யூனியன் பிரதேசங்களையும் மறு வரையறை செய்ய வேண்டுமாம். அதாவது ஏனாம் ஆந்திராவுடன் சேர்க்க வேண்டுமாம். மாகியை கேரளாவுக்குக் கொடுக்க வேண்டும். காரைக்கால் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டுமாம்.

இதோடு கடலூர் மற்றும் விழுப்புரம்போன்ற பகுதிகளை புதுவையுடன் இணைத்து, புதுவையை தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இப்படி செய்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்களாம்.

ராமதாஸ் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க ஆசைப்பட்டார். அவரது ஆட்களோ ஒவ்வொரு ஊரையும் தனித்தனி நாடாக்கிவிடுவார்கள் போல் தெரிகிறது. அப்படியாவது ஏதாவது ஒரு ஊருக்கு அன்புமணியை முதல்வர் ஆக்கலாம்னு ஆசைப்படுறாங்க போல...

ஆனா, அதுக்கும் வாய்ப்பு இருக்காதே ராஜா!