மோடி அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் மருத்துவர்கள்! ஆனால் கண்டுகொள்ளாத மருத்துவர் ராமதாஸ்! இது தான் பின்னணி!

மத்திய அரசு, மாநில அரசு மட்டுமின்றி ஏதாவது கட்சி விவகாரம் என்றால்கூட, உடனடியாக அதிரடியாக அறிக்கை கொடுப்பது ராமதாஸ் வழக்கம். எல்லோரும் பலரும் கவனிக்கத் தவறும்ம் விஷயங்களிலெல்லாம் கூட பொங்கி எழுந்து அறிக்கை தருவார்!


ஆனால், இப்போது கப்சிப் ராமதாஸ் ஆகிவிட்டார். எல்லாம் மகனுக்கான ஒரு எம்.பி. பதவிக்கு மட்டுமே எனும்போது அவர் மீதான மரியாதை ஒட்டுமொத்தமாக மக்களுக்குக் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்று மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் அநீதிக்கு மேல் அநீதி இழைத்து வருகிறார்கள்.

முறையான விவாதங்கள் இல்லாமல், மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காகமல் மக்கள் விரோத மசோதக்கள் 36ஐ மோடி அரசு அரங்கேறியுள்ளது. இப்படியொரு அசாதாரண சூழல் இதற்கு முன்பு எப்போதும் நிலவியதே இல்லை.

காஷ்மீர் நிலவரங்கள் நாளும் நெஞ்சை உலுக்கி வருகின்றன..! அங்கே மக்கள் அடக்கியொடுக்கப் பட்டிருப்பதாக பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் தகவல் தருகின்றன. இதைப் பற்றி இதுவரை ராமதாஸ் வாய் திறந்து எதுவும் சொல்லவே இல்லை.

இது எல்லாவற்றையும்விட மருத்துவ மசோதா. இதற்கு எதிராக தேசிய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து, தேசம் முழுதிலுமுள்ள மருத்துவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி தீவிரமாக எதிர்த்து போராடி வருகிறார்கள்!

ஆனால், அந்த துறையின் அமைச்சராகவும், தானுமே மருத்துவராகவும் உள்ள நிலையில் அன்புமணி அமைதி காத்து வருகிறார். அவர்தான் மயான அமைதியாக இருக்கிறார் என்றால், ராமதாஸும் அப்படியே இருக்கிறார்.

பதவிக்காக இப்படியெல்லாமா கொள்கைகளை குழி தோண்டிப் புதைப்பார்கள். ஸாரி ராமதாஸ் என்று பா.ம.க.வினரே வயிற்றெரிச்சல் படுகின்றனர்.