முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவின் அந்தரங்க வாழ்வை திரைப்படமாக இயக்குனர் ராம்கோபால் வர்மா எடுக்க உள்ளார்.
ஜெயலலிதா - சசிகலா அந்தரங்க வாழ்க்கை திரைப்படமாகிறது! ராம்கோபால் வர்மா இயக்குகிறார்!
பிரபலமானவர்களின் வாழ்க்கை மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை திரைப்படமாக எடுத்து புகழ் பெற்றவர் ராம்கோபால் வர்மா. பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை திரைப்படமாக எடுப்பது இவர் வல்லவர். சத்யா எனும் ஒரே திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் உச்சத்திற்கு சென்றவர்.
மராட்டிய மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவரான உத்தவ் தாக்கரேவை மையமாக வைத்து ராம் கோபால் வர்மா எடுத்த சர்க்கார் திரைப்படம் மிகவும் பிரபலம். இதேபோல் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்டி ராமராவ் in வாழ்க்கையை மையமாக வைத்து அண்மையில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
ராம் கோபால் வர்மா எடுத்து வெளியிட் டுள்ள ராமாராவ் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராம்கோபால் வர்மாவின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. இதுநாள் வரை ராம் கோபால் வர்மா திரைப்படங்கள் தெலுங்கு அல்லது இந்தியன் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியிட படுவதுதான் வழக்கம்.
ஆனால் இந்த முறை ராம்கோபால் வர்மா நேரடியாக ஒரு தமிழ் படம் இயக்க உள்ளார். அதுவும் ஜெயலலிதா மற்றும் சசிகலா இடையிலான உறவை மையமாக வைத்து எடுக்கப் போவதாக துணிச்சலாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்தத் திரைப்படத்திற்கு சசிகலா என்ற பெயரும் சூட்டி உள்ளார் வர்மா.
மன்னார்குடி கும்பல் குறித்து இந்த திரைப்படத்தில் தான் கூறப்போவதாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா சசிகலாவுக்கு ரோஜாப்பூ ஒன்றை கொடுப்பது போன்று புகைப்படத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.